சென்னை, தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை வர்த்தக மேலாளராக ரவீந்திரன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இது குறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை, கிண்டி இன்ஜியரிங் கல்லுாரியில் பட்டப் படிப்பை படித்த ரவீந்திரன், 1988ம் ஆண்டு இந்திய ரயில்வேயின் போக்குவரத்து சேவை பிரிவில் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். பின், தெற்கு ரயில்வேயில் தலைமை சரக்குப் போக்குவரத்து மேலாளராகவும், கன்டெய்னர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் குழும பொது மேலாளராகவும், சென்னைத் துறைமுக பொறுப்புக் கழக தலைவராகவும் பணியாற்றி உள்ளார். சென்னை மண்டலத்தில் முதுநிலை மண்டல செயலாக்க மேலாளராக பணிபுரிந்த போது, சிறப்பாக பணியாற்றியதற்காக பிரதமரின் விருதையும் பெற்றுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.