வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர்,-ஜம்மு --- காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு மற்றும் தொடர் மழை காரணமாக, நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கக்கூடிய ஸ்ரீநகர் -- ஜம்மு இடையேயான தேசிய நெடுஞ்சாலை நேற்று மூடப்பட்டது. மேலும், விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
![]()
|
ஜம்மு -- காஷ்மீரின் குல்மார்க், சோனாமார்க் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதலே கடும் பனிப்பொழிவு இருந்தது; சில பகுதிகளில் மழையும் பெய்தது.
இதையடுத்து, நிலச்சரிவு ஏற்படும் அபாயத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஸ்ரீநகர் -- ஜம்மு இடையேயான தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதனால், சுற்றுலா பயணியர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதேபோல, கடும் பனிப்பொழிவு காரணமாக விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு வந்து செல்லும் அனைத்து விமானங்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன. இதனால், விமான பயணியரும் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
![]()
|
காஷ்மீரில் உறைய வைக்கும் பனிப்பொழிவு நிலவும் சூழலில், ஸ்ரீநகர் மற்றும் குவாசிகண்ட் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு, 'மைனஸ் 0.2 டிகிரி செல்ஷியஸ்' வெப்பநிலை பதிவானது.
குல்மார்க் பகுதியில் மைனஸ் 5.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
'பனிப்பொழிவு இந்த மாதம் இறுதி வரை நீடிக்கும் என்பதால், வெப்பநிலை மேலும் குறையக்கூடும்' எனவானிலை மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement