ஆவடி, ஆவடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சாலைகளில், விபத்து, உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில், போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் திரிகின்றன.
கடந்தாண்டு மட்டும், மாடுகள் குறுக்கே சென்ற தால், ஏற்பட்ட சாலை விபத் தில் வாகன ஓட்டிகள் ஆறு பேர் உயிரிழந்தனர். ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், நவம்பரில் நடந்த ஆவடி மாநகராட்சிக் கூட்டத்தில், 'மாடுகள் ஏற்படும் விபத்து, உயிரிழப்புகளை தவிர்க்க, கால்நடைகளை சிறைபிடித்து, அவற்றின் உரிமை யாளர்களிடம், அபராதம் வசூலிக்க வேண்டும்' என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மாநகராட்சி ஊழியர் மற்றும் போக்குவரத்து போலீசார், நேற்று காலை, நான்கு பசு மாடுகள், 1 கன்றுக்குட்டி ஆகியவற்றை பிடித்தனர். அவற்றின் உரிமையாளர்களுக்கு, 5,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்தனர்.
அபராத தொகையை, 10 நாட்களுக்குள் மாநகராட்சியில் செலுத்தி, மாடுகளை மீட்காவிட்டால், அவை பொது ஏலத்தில் விடப்படும் என, மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.