கொளத்துார், தனியார் இஸ்லாமிய மெட்ரிகுலேஷன் பள்ளி யில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சென்னை, கொளத்துார், வாசுதேவன் தெருவில், தாஜ் கான்வென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இங்கு அதிக அளவில் இஸ்லாமிய மாணவ - மாணவியர் உட்பட, அனைத்து சமூக மாணவ - மாணவியரும் படிக்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா பேரிடரால், பள்ளிகள் இயங்காத நிலையில், இந்தாண்டு அனைத்து மாணவர்களும் உற்சாகமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், நேற்று காலை, சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.