கொடுங்கையூர், சென்னை, மூலக்கடை, ஜி.என்.டி.தெருவைச் சேர்ந்தவர் ஜஸ்டின், 41. இவர், தன் வீட்டருகே நடந்து சென்ற போது, அவ்வழியே வந்த மர்ம நபர்கள் மூவர், கத்தியை காட்டி மிரட்டி 1,000 ரூபாய் வழிப்பறி செய்தனர்.
இது குறித்து, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், வியாசர்பாடி, பி.வி.காலனியைச் சேர்ந்த முஸ்தபா, 21, வசந்தகுமார், 19, கொடுங்கையூர், துர்கா அவென்யூவை சேர்ந்த விக்னேஷ், 18, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மூவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.