ஆவடி, :சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம், தண்டுரையை சேர்ந்தவர் மகேஷ்குமார், 23. அவர் நேற்று முன் தினம் இரவு, அதே பகுதியை சேர்ந்த தன் நண்பர்கள் விக்னேஷ், 23, மணி, 26 ஆகியோருடன், அங்குள்ள எல்லையம்மன் கோவில் அருகே, மது குடித்தார்.
அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், மணி, விக்னேஷ் இருவரும் சேர்ந்து, மகேஷ்குமாரை சரமாரியாக தாக்கி, கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர்.
படுகாயமடைந்த மகேஷ்குமார், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து விசாரித்த பட்டாபிராம் போலீசார், நேற்று காலை, மேற்கண்ட இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து, ஒரு கத்தியை பறிமுதல் செய்தனர்.