தாம்பரம், பொங்கல் பண்டிகையை ஒட்டி, தாம்பரம் சண்முகம் சாலையில் உள்ள துணிக்கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. குடும்பத்தினருடன் கூட்டம் கூட்டமாக வந்து தேவையான துணிகளை எடுத்து செல்கின்றனர்.
மேலும், போகி பண்டிகை மேளம் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. தோல் மேளம் 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலும், லைலான் மேளம் 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
அப்துல் ரசாக் தெருவில் உள்ள பானை கடைகளில், சிறிய பொங்கல் பானை அளவிற்கு ஏற்றார் போல், 100 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், கரும்பு, ஜோடி 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
தாம்பரம் மாநகராட்சியில், சமத்துவ பொங்கல் விழா, நேற்று மாலை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில், மாநகராட்சி ஊழியர்கள் பங்கேற்று, பொங்கல் வைத்து வழிபட்டனர்.