முஸ்லிம் சிறுமி திருமண விவகாரம்: ஹரியானா அரசுக்கு 'நோட்டீஸ்'

Updated : ஜன 14, 2023 | Added : ஜன 14, 2023 | கருத்துகள் (16) | |
Advertisement
புதுடில்லி,-'வயதுக்கு வந்த இஸ்லாமிய பெண், தான் விரும்பியவரை மணம்புரிய, இஸ்லாமிய மத சட்டப்படி தகுதியுடையவராகிறார்' என்ற, ஹரியானா உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தேசிய குழந்தைகள் அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி, ஹரியானா மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது நபர், 16

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphoneபுதுடில்லி,-'வயதுக்கு வந்த இஸ்லாமிய பெண், தான் விரும்பியவரை மணம்புரிய, இஸ்லாமிய மத சட்டப்படி தகுதியுடையவராகிறார்' என்ற, ஹரியானா உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தேசிய குழந்தைகள் அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி, ஹரியானா மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.latest tamil news


ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது நபர், 16 வயது இஸ்லாமிய சிறுமியை திருமணம் செய்தார்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அந்த சிறுமி, ஹரியானாவில் உள்ள சிறுமியர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.

இதையடுத்து அந்த நபர், 'இஸ்லாமிய தனி நபர் சட்டப்படி, வயதுக்கு வந்த அல்லது 15 வயதுக்கு மேற்பட்ட இஸ்லாமிய பெண், தான் விரும்பியவரை மணம் புரிய தகுதியுடையவராகிறார்.

'எனவே, என் மனைவியை சிறுமியர் காப்பகத்தில் இருந்து விடுவித்து, என்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும். அவரது விருப்பத்தின்படியே திருமணம் செய்துள்ளேன்' என, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு, 'அந்த சிறுமி மைனர்; இன்னும் 18 வயதாகவில்லை. எனவே, சிறுமியர் காப்பகத்திலேயே அவரை தொடர்ந்து தங்க வைக்க வேண்டும்' என, வாதாடினார்.

இதையடுத்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:

இஸ்லாமிய மத சட்டத்தின் படி, வயதுக்கு வந்த அல்லது 15 வயதுக்கு மேற்பட்ட ஒரு இஸ்லாமிய பெண், தன் விருப்பப்படி ஒருவரை திருமணம் செய்யலாம்.

அது, குழந்தை திருமணசட்டத்தை மீறுவது ஆகாது. எனவே, மனுதாரரின் மனைவியை, அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, தேசிய குழந்தைகள் நல உரிமை அமைப்பு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


latest tamil news


தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகவும், இது குறித்து பதில் அளிக்கும்படி ஹரியானா மாநில அரசு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது. வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே, குஜராத்தில் கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட அப்துல் வஹாப் முகமது என்ற மத போதகரை, போலீசார் கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (16)

jayvee - chennai,இந்தியா
14-ஜன-202314:44:02 IST Report Abuse
jayvee ஒருபுறம் சரி ..மறுபுறம் தவறு.. ஒரு புறம் கைது .. மறுபுறம் தடை.. நீதிமன்றங்கள் கொள்கைவாதிகளின் பிரதிபலிப்புகளாக மாறிவிட்டது..\
Rate this:
Cancel
rmr - chennai,இந்தியா
14-ஜன-202314:14:53 IST Report Abuse
rmr இவனுங்க சிறுபான்மையினர் இல்லை அந்த சலுகைகளை நிறுத்துங்க ஒரே இந்தியா ஒரே சட்டம் இல்லனா கிளம்பி போகட்டும்
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
14-ஜன-202313:33:45 IST Report Abuse
Krishnamurthy Venkatesan THE ONLY WAY IS "UNIFORM CIVIL CODE" for all the citizens of India irrespective of their e, religion.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X