மாங்காடு, மாங்காடு நகராட்சில், பட்டூர் பேருந்து நிலையத்தில், தனியார் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், அரசு பேருந்துகள் நிறுத்த இடமில்லாமல் போவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மாங்காடில் இருந்து சென்னை பாரிஸ் மற்றும் தி.நகர் பகுதிகளுக்கு, அரசு பேருந்து இயக்கப்பட்டு வருதிறது.
பெரும்பாலும், பள்ளி, கல்லுாரி மற்றும் பணிக்கு செல்வோர், இப்பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
சமீப காலமாக, இந்த பேருந்து நிலையத்தை, தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு செய்து, ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வருவோரும், பேருந்து நிலையத்தில் வாகனங்களை நிறுத்துகிறனர். இதனால் பேருந்து ஓட்டுனர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.