சென்னை:அரசு பள்ளிகளில், உடற்கல்வி இயக்குனர்கள் நிலை - -1 பதவியில் உள்ளவர்களுக்கு, பல்வேறு தகுதி அடிப்படையில் பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி கமிஷனரகம் அனுப்பிய சுற்றறிக்கை:
தற்போதைய நிலையில், அரசு மேல்நிலை பள்ளிகளில், உடற்கல்வி இயக்குனர் நிலை -- 1 என்ற பணியில் சேர்ந்த ஆசிரியர்களின், பணி வரன்முறை நாள், நான்கு துறை தேர்வுகள் தேர்ச்சி பெற்ற விபரம் உள்ளிட்ட வரையறைப்படி, முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவர்கள் டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் துறை தேர்வுகள், நிர்வாக தேர்வுக்கான இரண்டு தாள்கள் மற்றும் தமிழக அலுவலக விதிகள் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதன் அடிப்படையில், பட்டியலில் முன்னுரிமை பெற்றுள்ளவர்களுக்கு, பதவி உயர்வு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.