நம் முப்படைகளில் அனைத்து ஜாதி, மதங்களை சேர்ந்தவர்களும் உள்ளனர். தேசிய ராணுவ அகாடமியில் வெற்றிகரமாக படிப்பை முடித்துள்ள சானியா மிர்ஸா, நாட்டின் முதல் இஸ்லாமிய பெண் போர் விமானியாக விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
ராஜ்நாத் சிங், ராணுவ அமைச்சர், பா.ஜ.,
சமூக பாதுகாப்பு சட்டம்!
ராஜஸ்தானில், ஒரு கோடி மக்களுக்கு மாதம், 1,000 ரூபாய் உதவித் தொகை அளிக்கிறோம். மத்திய அரசின் பங்களிப்பை வைத்து, 10 லட்சம் பேருக்கு மட்டுமே உதவ முடியும். எனவே, சமூக பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக பிரதமர் மோடி அரசு அமல்படுத்த வேண்டும்.
அசோக் கெலாட், ராஜஸ்தான் முதல்வர், காங்கிரஸ்
குறைந்த செலவில் சிகிச்சை!
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும், குறைந்த செலவில் உயர்தர சிகிச்சை வழங்குவதற்கு மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விஷயத்தில் அனைவரும் ஒரே குடும்பம் என்ற கொள்கையின் அடிப்படையில் அரசு செயல்படுகிறது.
மன்சுக் மாண்டவியா
சுகாதாரத்துறை அமைச்சர், பா.ஜ.,