சென்னை:தமிழக சட்டசபை, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
சட்டசபை கூட்டத் தொடர், 9ம் தேதி துவங்கியது. அன்று காலை 10:00 மணிக்கு கவர்னர் உரையாற்றினார். அவரை எதிர்த்து தி.மு.க., கூட்டணி கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர்.
அவர் உரையில் சில பகுதிகளை விடுத்தும், சில பகுதிகளை சேர்த்தும் வாசித்தது, ஆளும் கட்சி யினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, சட்டசபை விதியை தளர்த்தி, கவர்னர் உரை தொடர்பாக, முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் கூட்டம் முடிவதற்கு முன்பாகவே, கவர்னர் வெளியேறினார்.
மறுநாள் எம்.எல்.ஏ., திருமகன் ஈ.வெ.ரா., மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், முக்கியப் பிரமுகர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கடந்த 11 மற்றும் 12ம் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. நேற்று முதல்வர் ஸ்டாலின் விவாதத்திற்கு பதில் அளித்தார். நான்கு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
அதையடுத்து, சட்டசபை மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.