வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர்-ஜம்மு - காஷ்மீரில் 'ட்ரோன்' வாயிலாக வெடிகுண்டுகள், வெடிமருந்துகள் எடுத்து வரப்பட்ட விவகாரத்தில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கியதலைவர் உள்ளிட்ட ஆறு பேர் மீது, தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
![]()
|
ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ராஜ்பாக் பகுதியில் இருக்கும் சர்வதேச எல்லைக் கோடு அருகே, கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சோதனையில், ட்ரோன் ஒன்று இடைமறிக்கப்பட்டதில் அதிலிருந்து வெடிகுண்டு வீசும் 'லாஞ்சர்'கள், வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.
இது குறித்த வழக்கில், சஜ்ஜல் குல் உட்பட ஆறு பேர் மீது நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
![]()
|
இது குறித்து, தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரி கூறியதாவது:
லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவரான ஷேக் சஜ்ஜத் குல் ஒரு பாகிஸ்தானி ஏஜன்ட். இவர் பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் வழியாக நம் பகுதிக்கு எடுத்து வரப்படும் வெடிகுண்டுகள், வெடிபொருட்களை எடுத்து வந்து, காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதிகளிடம் சேர்த்து விடுவார்.
இந்த வழக்கு தொடர்பாக, சஜ்ஜத் குல் உட்பட ஆறு பேர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement