சென்னை:தடையை மீறி கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அவரது கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
சட்டசபையில் உரையாற்றிய கவர்னர் ரவி, சிலவற்றை சேர்த்தும், சிலவற்றை தவிர்த்தும் பேசியது சர்ச்சையை கிளப்பியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில், நேற்று கிண்டி கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடந்தது. அக்கட்சி எம்.பி., ரவிகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முத்தரசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று, கவர்னருக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர்.
இதையடுத்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன், அவரது கட்சியினரை, போலீசார் கைது செய்தனர்.