சென்னை:ஊரக வளர்ச்சி துறையில், சாலை பணிகளை ஆய்வு செய்யும் வகையில், 761 சாலை ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான போட்டி தேர்வு, மே 7ம் தேதி நடத்தப்படும் என, அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நேற்று அறிவித்தது.
இந்த பணியில் சேர்வோருக்கு, முதல் கட்ட சம்பளமாக, 19 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும்.
அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில், சிவில் வரைவாளர் பிரிவில், ஐ.டி.ஐ., சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். டிப்ளமா சிவில் இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, 60 வயது முடிந்திருக்க கூடாது. மற்றவர்களுக்கு, 37 வயது முடிந்திருக்க கூடாது என, வயது வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. பிப்ரவரி 11ம் தேதிக்குள் விண்ணப்பங்களை 'ஆன்லைனில்' பதிவு செய்ய வேண்டும்.
கூடுதல் விபரங்கள், சந்தேகங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி.,யின் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.