சென்னை:சென்னை --- அந்தமான் இடையே தாற்காலிகமாக நிறுத்தப்பட்ட விமான சேவை, இன்று முதல் மீண்டும் துவங்குகிறது.
அந்தமான் தீவுக்கு, சென்னையில் இருந்து நாள்தோறும் 14 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
அந்தமான் விமான நிலையத்தில் ஓடுபாதை மற்றும் விமான நிலைய பராமரிப்பு பணி, 2022 நவம்பர் முதல் நடந்து வருகிறது.
இதனால் அவ்வப்போது விமான சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. கடந்த நான்கு நாட்களாக, சென்னை -- அந்தமான் விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
இன்று முதல் மீண்டும் விமானங்கள் இயக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.