திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம், நேற்று நடந்தது. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் தலைமை வகித்தார்.
எலும்பு முறிவு மருத்துவர் கிருபானந்தன், காது மூக்கு தொண்டை மருத்துவர் சுரேஷ்குமார், கண் மருத்துவர் சத்தியா, மனநல மருத்துவர் சஞ்சய், நரம்பியல் மருத்துவர் வசந்த் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து, அடையாள அட்டைக்கு பரிந்துரைத்தனர்.
நேற்றைய முகாமில், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த 35 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.