வீட்டு வரியுடன் ஆதார் எண் நகராட்சி கமிஷனர் அறிவிப்பு

Added : ஜன 14, 2023 | |
Advertisement
பல்லடம்:பல்லடம் நகராட்சி கமிஷனர் விநாயகம் வெளியிட்ட அறிவிப்பு:பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளில் வசித்து வரும் பொதுமக்கள், தங்களது வீட்டு வரியுடன், ஆதார் எண், மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றை இணைக்க வேண்டும். தொழில், மற்றும் வணிக நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தின் ஜி.எஸ்.டி., எண், மற்றும் பான் கார்டு எண் உள்ளிட்டவற்றை இணைக்க வேண்டும்.வாடகை வீட்டில்

பல்லடம்:பல்லடம் நகராட்சி கமிஷனர் விநாயகம் வெளியிட்ட அறிவிப்பு:

பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளில் வசித்து வரும் பொதுமக்கள், தங்களது வீட்டு வரியுடன், ஆதார் எண், மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றை இணைக்க வேண்டும். தொழில், மற்றும் வணிக நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தின் ஜி.எஸ்.டி., எண், மற்றும் பான் கார்டு எண் உள்ளிட்டவற்றை இணைக்க வேண்டும்.

வாடகை வீட்டில் குடியிருப்பவர்களாக இருந்தால், வீட்டின் உரிமையாளர்கள் ஆதார் எண், மற்றும் ரேஷன் கார்டு எண்களை பெற்று இணைக்க வேண்டியதும் அவசியம்.

மேற்கூறிய ஆவணங்களை, இ சேவை மையங்கள் மூலமாகவோ, அல்லது நகராட்சி சேவை மையத்தில் நேரடியாகவோ வழங்கலாம். மேலும், நேரில் வர இயலாதவர்கள், 99523 97954 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு, வாட்ஸ் அப் மூலமாக தங்களது விவரங்களை தெரிவித்தும், ஆவணங்களை இணைத்துக் கொள்ளலாம்.

எனவே, ஆவணங்களை இணைக்காத பொதுமக்கள் விரைவாக அவற்றை இணைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X