அனுப்பர்பாளையம்:கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூருக்கு நான்காவது குடிநீர் திட்டம் கொண்டு வரப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு சோதனை ஓட்டத்தின் போது, திருமுருகன்பூண்டியில், பிரதான குழாயின் வால்வில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், பல லட்சம் லிட்டர் குடிநீர் வெளியேறியது. சாலையில் வெள்ளம் போல் ஓடியது. மாநகராட்சி அதிகாரிகள் குழாய் 'வால்வு' உடைப்பினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.