திருப்பூர்:திருப்பூர், மாநகராட்சி எதிரில் உள்ள ஸ்ரீ அம்மன் ஜூவல்லர்ஸ், 35 ஆண்டுகளை கடந்து திருப்பூர் மக்களின் அபிமானத்தையும், ஆதரவை பெற்று செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஸ்ரீ அம்மன் ஜூவல்லர்ஸின் உரிமையாளர் செந்தில்குமார் கூறியதாவது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 11 முதல், 15ம் தேதி வரை சிறப்பு விற்பனை துவங்கி நடந்து வருகிறது. வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தங்கம், வைரம், வெள்ளி என, அனைவரையும் கவரும் வகையில் பல டிசைன்களில் நகைகள் உள்ளது.
'இல்லவே இல்லை செய்கூலி சேதாரம்,'தங்கத்தின் விலை மட்டுமே என்று அறிவித்து, விற்பனை செய்து வருகிறோம். 'ஆன்டிக் கலெக் ஷன், விவாகா தாலிக்கொடி, பிளைன் நெக்லஸ், நவரத்தினம் மாலைகள், ஆரங்கள், நெக்லஸ் மற்றும் வளையல்கள் பெண்களை பெரிதும் ஈர்க்கிறது.
குழந்தைகளுக்கான கம்மல், கொழுசு, வளையல் உள்ளது. வெள்ளி தாம்பூலம் தட்டு, வெள்ளியில் தங்க நகை வடிவமைப்பு போன்று செய்யப்பட்டுள்ள ஆன்டிக் செட் என, பல வடிவமைப்புகளில் உள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.