புத்தாண்டில் நடந்த விபத்து எதிரொலி: புதுடில்லியில் 11 போலீசார் சஸ்பெண்ட்| 11 policemen suspended in New Delhi after New Years accident | Dinamalar

புத்தாண்டில் நடந்த விபத்து எதிரொலி: புதுடில்லியில் 11 போலீசார் 'சஸ்பெண்ட்'

Updated : ஜன 14, 2023 | Added : ஜன 14, 2023 | கருத்துகள் (1) | |
புதுடில்லி,-புதுடில்லியில் புத்தாண்டு அன்று நடந்த விபத்தில், இளம் பெண் காருக்குள் சிக்கி, 12 கி.மீ., துாரம் இழுத்துச் செல்லப்பட்டு இறந்த வழக்கில், ரோந்து பணியில் கவனக்குறைவாக இருந்ததாக, 11 போலீசார் அதிரடியாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். புதுடில்லியில் கடந்த புத்தாண்டு அன்று இரவில், இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் மீது, ஒரு கார் மோதியது. இதில், காருக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி,-புதுடில்லியில் புத்தாண்டு அன்று நடந்த விபத்தில், இளம் பெண் காருக்குள் சிக்கி, 12 கி.மீ., துாரம் இழுத்துச் செல்லப்பட்டு இறந்த வழக்கில், ரோந்து பணியில் கவனக்குறைவாக இருந்ததாக, 11 போலீசார் அதிரடியாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.latest tamil news


புதுடில்லியில் கடந்த புத்தாண்டு அன்று இரவில், இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் மீது, ஒரு கார் மோதியது. இதில், காருக்கு அடியில் அந்த பெண் சிக்கினார்.

காருக்குள் இருந்தவர்கள், மது போதையில் இருந்ததால், அந்த பெண், 12 கி.மீ., துாரம் இழுத்துச் செல்லப்பட்டு பலியானார்.

இதன்பின், காரில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம், புதுடில்லியில் மட்டுமல்லாமல் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய கார் சென்ற வழித்தடத்தில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் இருந்த போலீசார், பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம், புதுடில்லி போலீசாருக்கு உத்தரவிட்டது.


latest tamil news


இதையடுத்து, சம்பவத்தன்று பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட இரண்டு எஸ்.ஐ., நான்கு உதவி எஸ்.ஐ., உட்பட, 11 போலீசாரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து, புதுடில்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா நேற்று உத்தரவிட்டார்.

புதுடில்லி போலீஸ் துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X