திருப்போரூர்:திருப்போரூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாடுகளுக்கு கட்டப்படும் மூக்கணாங்கயிறு, சலங்கை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
மாட்டுப்பொங்கல் நாளில், மாடுகளை குளிப்பாட்டி, அலங்காரம் செய்து வணங்குகிறோம்.
நடப்பாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிராமப்புறங்களில் மாடுகளுக்கு கட்டப்படும் மூக்கணாங் கயிறு, கைப்பிடிக் கயிறு, கழுத்துக் கயிறு, சலங்கை உள்பட பல்வேறு வகையான பொருட்கள் திருப்போரூர் பகுதிகளில் விற்பனைக்கு வந்துள்ளன.
மாடு வளர்ப்போர், விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர்.
இக்கயிறுகள் பொங்கலுக்காக மட்டும் அதிகளவில் வரவழைக்கப்பட்டு விற்கப்படுகின்றன.