மறைமலைநகர்:தமிழக அரசின் தொல்லியல் துறை, உலக மரபு வார விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ - மாணவியருக்கு பாரம்பரிய சின்னங்கள் தொடர்பாக ஓவியம், கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி போன்ற போட்டிகள், கடந்த நவம்பர் மாதம் நடந்தது.
இதில், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், நின்னகரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ - மாணவியர் 150 பேர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றி பெற்ற 15 பேருக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டன.
இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியரை பாராட்டி, தமிழக தலைமைச் செயலர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், மாணவ - மாணவியர், தலைமை ஆசிரியர், ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.