மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த நின்னகரை பகுதியில், மறைமலை நகர் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, சந்தேகப்படும் வகையில் அந்த வழியே வந்த நபரை, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
பிடிபட்ட நபர் மறைமலை நகர் அடுத்த காவனுார் பகுதியைச் சேர்ந்த விமல், 24. இவர், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்.
கொலை குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களுக்கு உதவி செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த விமலை, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.