ஆனைமலை;குடியரசு தின விளையாட்டு போட்டிகளில், கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், கைப்பந்து போட்டியில், நான்காம் இடம் பிடித்தனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான, 63வது குடியரசு தின விளையாட்டு போட்டிகள், தர்மபுரியில் நடந்தன. கடந்த, 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடந்த போட்டியில், மாநிலம் முழுவதும் இருந்து, 38 அணிகளும்,தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணிகள் இரண்டு, என, 40 அணிகள் பங்கேற்றன.
இதில், கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் போட்டியில், கடலுார் அணியை வென்றது. இரண்டாவது போட்டியில், தேனி அணியை வென்று, அரை இறுதிக்கு தேர்வானது.
அரை இறுதியில், விருதுநகர் அணியுடன் விளையாடிய, கோட்டூர் பள்ளி அணி, இறுதி வரை போராடி தோல்வியடைந்து. போட்டியில், நான்காம் இடம் பிடித்தது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியர் கிருபாசங்கர், உடற்கல்வி இயக்குனர் பிரதீப் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.