செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், சமத்துவ பொங்கல் விழா, கல்லுாரி முதல்வர் டாக்டர் நாராயணசாமி தலைமையில், நடந்தது.
இந்த விழாவில் கோலப்போட்டி, உறியடி, சிலம்பாட்டம், கரகாட்டம், உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில், மருத்துவக் கல்லுாரி மற்றும் செவிலியர் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பரிசுகளை, முதல்வர் வழங்கினார். துணை முதல்வர் டாக்டர் அனிதா, பேராசிரியர் டாக்டர் அரசு மற்றும் மருத்துவக் கல்லுாரி மாணவர்கள், செவிலியர்கள் கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.