கோவை:விமான நிறுவனங்களில் வாடிக்கையாளர் சேவை பணியில் ஈடுபட விரும்புவோருக்கு, தாட்கோ சார்பில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை கலெக்டர் சமீரன் அறிக்கை:
தாட்கோ நிறுவனம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகளை வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, தற்போது பி.டி.சி., ஏவியேசன் அகாடமி நிறுவனம் மூலம் விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சி அளிக்க உள்ளது. விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அவற்றின் தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரியும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்.
இப்பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஏரோஸ்பேஸ் ஸ்கில்ஸ் செக்டர் கவுன்சில் என்ற அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சி பெற்றவர்கள், இன்டிகோ ஏர்லைன்ஸ், ஸ்பைஸ் ஜெட், கோ பர்ஸ்ட், விஸ்தாரா, ஏர் இந்தியா போன்ற நிறுவனங்களில் பணிபுரிய வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
இத்திட்டத்தில் சேர தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், தாட்கோ இணையதளமான www.tahdco.com மூலம் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.