செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகா பகுதியில், சம்பா பருவத்தில், நெல் சாகுபடி செய்துள்ளனர்.
திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் தாலுகா பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க மக்கள் குறைதீர்க்கும் நாளில், கலெக்டரிடம் விவசாயிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, திருக்கழுக்குன்றம் தாலுகாவில், மணப்பாக்கம், தத்தலுார், ஆயப்பாக்கம், நடுவக்கரை மற்றும் மதுராந்தகம் தாலுகாவில், ஒரத்தி ஆகிய ஊராட்சிகளில், அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு, கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார்.