ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், சாலையோரங்களில் வலுவிழந்து அபாயகரமான நிலையில் காணப்பட்ட, 700 மரங்கள் கடந்தாண்டில் அகற்றப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், சாலையோரங்களில், பழமை வாய்ந்த கற்பூரம், சீகை, பைன் மரங்கள் அதிகளவில் உள்ளன. பருவ மழையின் போது சாலையில் ஏற்படும் மண்சரிவால், உயரமான மரங்கள் வலுவிழந்து அபாயகரமான நிலையில் காணப்படுகிறது. இந்த மரங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, மாவட்ட முழுவதும் கடந்தாண்டில், 700 அபாயகரமான மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், மக்கள் மனுக்கள் அளித்தால், ஆய்வு செய்து மரங்கள் அற்றப்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.