அச்சிறுபாக்கம்:செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அடுத்த கடமலைப்புத்துாரைச் சேர்ந்தவர் ஏழுமலை, 47.
துாய்மை பணியாளர். இவர் நேற்று பணி முடிந்து, இருசக்கர வாகனத்தில், கடமலைப்புத்துாருக்கு சென்று கொண்டிருந்தார்.
தொழுப்பேடு அருகே, சென்னை-யில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அச்சிறுபாக்கம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.