ஸ்ரீபெரும்புதுார்:சோமங்கலம் அரசு பள்ளி மைதானத்தில் சிறுவன் ஓட்டிப்பழகிய கார் மோதி மாணவியர் இருவர் காயமடைந்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் அருகே சோமங்கலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி மைதானத்தை சுற்றி மதில் சுவர் உள்ளது.
நேற்று காலை 11.30 மணியளவில், 15 வயது சிறுவனுக்கு பள்ளி மைதானத்தின் உள்ளே சென்று கார் ஒட்டி பழகியுள்ளார். அப்போது பிளஸ் 1 மாணவர்கள் உடற்கல்வி வகுப்பு என்பதால் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது சிறுவன் ஓட்டிச் சென்ற கார் மோதியதில், 11 வகுப்பு மாணவியர் இருவர் காயமடைந்தனர். இதில் ஒரு மாணவிக்கு மயங்கி விழுந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் காயமடைந்த மாணவியரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்து சென்று, சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன், சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.