ஊட்டி:ஊட்டி அருகே அணிக்கொரையில் கலெக்டர் தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
ஊட்டி ஊராட்சி ஒன்றியம் துானேரி ஊராட்சிக்கு உட்பட்ட அணிக்கொரை கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் உமாவதி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலெக்டர் அம்ரித் பங்கேற்று, சமத்துவ பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து, கோலப்போட்டி, கலை நிகழ்ச்சி நடந்தது.