கோவை:சார்ஜாவில் இருந்து கோவைக்கு சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் 3.5 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.
சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வருவதாக, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று சார்ஜாவில் இருந்து கோவை வந்த 'ஏர் அரேபியா' விமான பயணியர் ஆறு பேரிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அவர்கள் மறைத்து வைத்திருந்த, சுமார் 2.05 கோடி மதிப்புள்ள, 3.5 கிலோ வெளிநாட்டு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, தங்கம் கடத்தி வந்த மணிகண்டன், 32, இப்ராகிம், 20 ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.