திருப்பூர்:ஆயத்த ஆடை ஜவுளி மற்றும் வீட்டு அலங்காரத்துறை திறன் கவுன்சில் தலைவராக, சக்திவேல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற, ஆயத்த ஆடை ஜவுளி மற்றும் வீட்டு அலங்காரத்துறை திறன் கவுன்சில் செயல்படுகிறது.
மத்திய அரசின், திறன் வளர்ப்பு மற்றும் தொழில் முனைவோர் உருவாக்கம் அமைச்சகம் சார்பில், இந்த கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது.
முதல் தலைவராக (2013 - 2018) இருந்த சக்திவேல், மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், 2025ம் ஆண்டு வரை தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சக்திவேல் கூறுகையில், ''ஜவுளி தொழில்முனைவோரை ஒருங்கிணைத்து, வேலை உருவாக்கம் மற்றும் ஆடைத் தொழிலின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், கவுன்சில் செயல்படுகிறது.
பிரதமரின் தொலைநோக்கு திட்டம் வெற்றியடையும் வகையில், கவுன்சில் திறமையுடன் செயல்படும்,'' என்றார்.