சபரிமலையில் இன்று மாலை மகரஜோதி பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீஸ்

Added : ஜன 14, 2023 | |
Advertisement
சபரிமலை:சபரிமலையில் இன்று மகரஜோதி விழா நடக்கிறது. பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மேலும் இரண்டு எஸ்.பி.க்கள் சன்னிதானத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.சபரிமலையின் முக்கிய விழாவான மகர ஜோதி விழா இன்று நடைபெறுகிறது. மூலவர் விக்ரகத்தில் அணிவிக்க திருவாபரணம் நேற்று முன்தினம் பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்பட்டது. இன்று மாலை இது

சபரிமலை:சபரிமலையில் இன்று மகரஜோதி விழா நடக்கிறது. பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மேலும் இரண்டு எஸ்.பி.க்கள் சன்னிதானத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சபரிமலையின் முக்கிய விழாவான மகர ஜோதி விழா இன்று நடைபெறுகிறது. மூலவர் விக்ரகத்தில் அணிவிக்க திருவாபரணம் நேற்று முன்தினம் பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்பட்டது. இன்று மாலை இது சரங்குத்தி வந்தடையும். மாலை 6:35 மணிக்கு சன்னதிக்கு வரும் திருவாபரண பெட்டியை தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி வாங்கி மூலவருக்கு அணிவித்து தீபாராதனை நடத்துவர்.


மகர சங்கரம பூஜைஅடுத்த சில விநாடிகளில் பொன்னம்பல மேட்டில் மகரஜோதி மூன்று முறை காட்சி தரும். மகரஜோதிக்கு முன்னோடியாக நேற்று முன்தினம் மாலையில் பிராசாத சுத்தி பூஜைகளும், நேற்று மதியம் பிம்பசுத்தி பூஜைகளையும் தந்திரி கண்டரரு ராஜீவரரு நடத்தினார்.

நேற்று மாலை பம்பையில் 'பம்பை விருந்து' படைத்து பக்தர்கள் வழிபட்டனர். மாலையில் பம்பை விளக்கு நடைபெற்றது. மூங்கிலில் தேர் கட்டி அதில் விளக்குகள் ஏற்றி பம்பை ஆற்றில் மிதக்க விட்டனர்.

இன்று நடக்கும் மற்றொரு முக்கிய நிகழ்வு மகரசங்கரம பூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் கடக்கும் வேளையில் நடைபெறும் இந்த பூஜை, இன்று இரவு 8:45 மணிக்கு நடக்கிறது.

இந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கன்னி ஐயப்பன் மூலம் கொடுத்து விடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு மூலவருக்கு அபிேஷகம் செய்யப்படும்.


மலை ஏற கட்டுப்பாடுகள்ஜோதி தரிசனத்துக்காக ஏராளமான பக்தர்கள் சன்னிதானத்தின் சுற்றுப்புறங்களில் கூடியுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

இன்று மதியம் 12:00 மணிக்கு பின்னர் பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் வரமுடியாது. ஜோதி தரிசனம் முடிந்த உடன் ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் மலை இறங்குவர். அந்த நேரத்தில் நெரிசல் ஏற்படாமல் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுவரை சன்னிதானத்தில் ஒரு எஸ்.பி., தலைமையில் பாதுகாப்பு இருந்தது. தற்போது மேலும் இரண்டு எஸ்.பி.க்கள் வந்துள்ளனர். எஸ்.பி.க்கள் பிஜூமோன் சன்னிதானத்திலும், ஆர். ஆனந்த் பாண்டித்தாவளத்திலும், கே.இ. பைஜூ,திருவாபரண தரிசனத்துக்கு பக்தர்கள் முண்டியடிக்கும் கோயில் வடக்கு வாசலிலும் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

21 டி.எஸ்.பி., 36 இன்ஸ்பெக்டர், 180 எஸ்.ஐ. உட்பட 1765 போலீசார் சன்னிதானத்தில் உள்ளனர். பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க சபரிமலை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரான ஏ.டி.ஜி.பி., எம்.ஆர். அஜித்குமார் சன்னிதானத்தில் முகாமிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X