மல்லிகை கிலோ ரூ.4500க்கு விற்பனை மல்லிகை கிலோ ரூ.4500க்கு விற்பனை

Added : ஜன 14, 2023 | |
Advertisement
ராமநாதபுரம்:பொங்கல் பண்டிகை மற்றும் வரத்து குறைவால் ராமநாதபுரத்தில் கடந்த மாதத்தை விட மல்லிகை பூ விலை ஆறு மடங்கு அதிகரித்து நேற்று கிலோ ரூ.4000 முதல் 4500 வரை விற்றது.ராமநாதபுரம் மாவட்டத்தில் நயினார்கோவில், தங்கச்சிமடம் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் மல்லிகை பூ சாகுபடி நடக்கிறது. பெரும்பலான பூக்கள் மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து மொத்தமாக
 மல்லிகை கிலோ ரூ.4500க்கு விற்பனை மல்லிகை கிலோ ரூ.4500க்கு விற்பனை

ராமநாதபுரம்:பொங்கல் பண்டிகை மற்றும் வரத்து குறைவால் ராமநாதபுரத்தில் கடந்த மாதத்தை விட மல்லிகை பூ விலை ஆறு மடங்கு அதிகரித்து நேற்று கிலோ ரூ.4000 முதல் 4500 வரை விற்றது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நயினார்கோவில், தங்கச்சிமடம் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் மல்லிகை பூ சாகுபடி நடக்கிறது. பெரும்பலான பூக்கள் மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து மொத்தமாக வாங்கி வரப்பட்டு ராமநாதபுரம் சந்தையில் வியாபாரிகளால் விற்கப்படுகிறது.

தற்போது பனியால் வரத்து குறைந்துள்ளதாலும் பொங்கல் பண்டிகை, தை மாதம் பிறக்க உள்ள நிலையிலும் பூக்களின் விலை கடந்த மாதத்தை விட 6 மடங்கு அதிகரித்துள்ளது.

பூ வியாபாரிகள் அதிக முதலீடு செய்தும் எதிர்பார்த்த விற்பனையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். மஞ்சள் கொத்து வரத்து குறைவால் ஜோடி ரூ. 50 வரை விற்கப்பட்டது.

ராமநாதபுரம் மலர் வர்த்தக சங்க மாவட்ட தலைவர் முருகன் கூறியதாவது:

கிலோ ரூ.500க்கு விற்ற மல்லிகை முதல் தரம் ரூ.4500, 2ம் தரம் 4000, கனகாம்பரம் ரூ.6000, முல்லை ரூ.4000, ரோஜா ரூ.300, செவ்வந்தி ரூ.400, செவ்வரளி ரூ.800, கதம்பம் முழம் ரூ.25க்கு விற்கப்படுகிறது.

ரூ.20 ஆயிரம் முதலீடு செய்ய வேண்டிய கடையில் தற்போது ரூ.1.50 லட்சம் வரை தேவைப்படுகிறது என்றார்.

விலை உயர்வால் மக்கள் குறைந்த அளவே வாங்குகின்றனர்.

இவ்வாண்டு பொங்கல் வியாபாரத்தில் முதலீட்டை எடுக்க சிரமப்படுகிறோம், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X