சென்னை;ஊரக திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஊரக பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வி உதவி தொகைக்கான ஊரக திறனாய்வு தேர்வு, கடந்த டிச., 17ல் நடந்தது. இந்த தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பை, அரசு தேர்வுத் துறை நேற்று வெளியிட்டது. மாணவர்கள், dge1.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விடைக்குறிப்பை பார்க்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.