பாகூர் : பாகூர் உழவர் உதவியகம் மற்றும் பண்ணை தகவல் ஆலோசனை மையம் சார்பில், 'சிறுதானியங்கள் உற்பத்தி விழிப்புணர்வு மற்றும் சாகுபடி' என்ற தலைப்பிலான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
பாகூர் கோட்ட இணை வேளாண் இயக்குநர் அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு ஆத்மா திட்ட வட்டார வளர்ச்சி மேளாலர் ஆறுமுகம் வரவேற்றார். கோட்ட வேளாண் இணை இயக்குநர் சிவபெருமான் தலைமை தாங்கி ''மண்வளம் மற்றும் தண்ணீர் சிக்கனத்திற்கு சிறுதானிய உற்பத்தி'' என்ற தலைப்பில் பேசினார். பாகூர் உழவர் உதவியக வேளாண் அலுவலர் பரமநாதன் ''இன்றைய சூழலில் சிறுதானியங்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றால் ஏற்படும் பயன்கள்'' என்ற தலைப்பில் பேசினார்.
காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் உழவியல் துறை வல்லுனர் ரவி ''சிறுதானிய உற்பத்தியில் நவீன உழவியல் தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பு கூட்டுதல்'' என்ற தலைப்பிலும், பூச்சியியல் வல்லுனர் ் விஜயகுமார் ''சிறுதானிய பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மற்றும் காட்டுப்பன்றி நிர்வாகம்'' என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
தொடர்ந்து, விவசாயிகளுக்கு காட்டுப்பன்றி விரட்டி செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது.
உதவி வேளாண் அலுவலர் கோபால் நன்றி கூறினார்.