கடலுார் : பாடலீஸ்வரர் கோவில் கோ சாலையை முறையாக பராமரிக்க வேண்டும் என காங்., கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில பொதுகுழு நிர்வாகி குமார் கலெக்டர் பாலசுப்ரமணியனுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு;
கடலுார், திருப்பாதிரிபுலியூர், சரவணா நகர் இணைப்பு சாலை குண்டும் குழியுமாக மாறி, அதிக விபத்துக்கள் ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கின்றனர். உடன் அந்த சாலையை சீரமைக்க வேண்டும். கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கோ சாலை முறையான பராமரிப்பு இல்லாமலும், நேர்த்திக் கடனாக வழங்கப்படும் மாடுகளுக்கு போதிய இடவசதிகள் இல்லாததால் கால்நடைகள் சிரமப்படுகின்றன.
கோ சாலைக்கு போதிய ஆட்கள் நியமித்து, நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில், பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகளை ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.