புதுச்சேரி : சூரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகையில்லா போகி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் வரவேற்றார். மருத்துவ அதிகாரி மேனகா தலைமை தாங்கினார். மருத்துவர் ராஜ்குமார், சித்த மருத்துவர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர்.
புகையில்லா போகி விழிப்புணர்வு ஊர்வலத்தில் மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்றனர். மருத்துவர் மேனகா, போகியில் பொருட்களை எரிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கினார்.
இறுதியில் மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர் கல்லுாரி மாணவர்கள் புகையில்லா போகி விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டு, பொங்கல் வைத்து கொண்டாடினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை செவிலியர் அதிகாரி சியாமளா, பானுமதி, நாகம்மாள், கிராமப்புற செவிலியர்கள் மாலினி, செவிலியர் கல்லுாரி உதவி பேராசிரியர்கள் மணிமேகலை, சக்தி பிரியா, சந்தியா செய்திருந்தனர்.