வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை,--'பொங்கல் விடுமுறையில், எந்த கல்வி நிறுவனமும் சிறப்பு வகுப்பு நடத்தக் கூடாது' என, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
![]()
|
பொங்கல் திருநாளை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரிகளுக்கு, இன்று முதல் வரும், 17ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில கல்வி நிறுவனங்களில், நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்துள்ளதாகவும், மற்ற இரண்டு நாட்களும் சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
![]()
|
இதுகுறித்து, பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி துறை அதிகாரிகள் தரப்பில், தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
'எந்த கல்வி நிறுவனமும், பொங்கல் விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் விடுமுறைகளை முழுமையாக வழங்க வேண்டும்' என, அறிவுறுத்தி உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement