திருக்கனுார் : கூனிச்சம்பட்டு தேவநாத சுவாமி பஜனை குழுவினர், கறவை பசுவுடன் வீதியுலா சென்றனர்.
திருக்கனுார் கூனிச்சம்பட்டு தேவநாத சுவாமி கோவில் பஜனை குழுவினர் மார்கழி மாதம் 1ம் தேதி முதல் பஜனை வீதியுலா நடத்தி வருகின்றனர்.
மார்கழி மாதம் 28ம் நாளான நேற்று முன்தினம் கிருஷ்ணர் 'கறவை பசு பின் செல்லும்' நிகழ்ச்சி நடந்தது. அதனையொட்டி விடியற்காலை 5 மணிக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்ட சிறுவர், சிறுமியருடன், கறவை பசு மற்றும் கிருஷ்ணர் சுவாமியுடன் பஜனை குழுவினரின் வீதியுலா நடைபெற்றது.