கடலுார், : கடலுார் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 10 ஆண்டு பணி முடித்த பின், தேர்வு நிலை உத்தரவு வழங்குவது வழக்கம்.
அதன்படி 156 பட்டதாரி ஆசிரியர்கள், 23 முதுகலை ஆசிரியர்கள், 12 உடற்கல்வி ஆசிரியர்கள் என, 192 பேருக்கு தேர்வு நிலை உத்தரவை கடலுாரில் நடந்த சிறப்பு முகாமில் மாவட்டக் கல்வி அலுவலர் சங்கர் வழங்கினார்.
தலைமை ஆசிரியர்கள், பணியாளர்களை உள்ளடக்கிய குழுக்கள் அமைத்து அனைத்தும் சரி பார்க்கப்பட்டு ஒரே நாளில் 192 ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை ஆணை வழங்கிய மாவட்ட கல்வி அலுவலர், நேர்முக உதவியாளர் கந்தசாமியை ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டினர்.