கடலுார் ;திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவியர், வன உயிரின வார விழா போட்டியில் வெற்றி பெற்றனர்.
கடலுாரில் மாவட்ட அளவில் வன உயிரின வார விழா-வை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடந்தது.
இதில், நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர் நிலைப் பள்ளி மாணவியர் 9ம் வகுப்பு ஸ்ரீமதிமலர் கட்டுரைப் போட்டியில் முதலிடம், 10ம் வகுப்பு கோபிகா மூன்றாமிடம், மாணவி சீதாலட்சுமி பேச்சுப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்தனர். இவர்களுக்கு கடலுாரில் வனச்சரக அலுவலர் அப்துல் அமீது பரிசு வழங்கினார்.
வென்ற மாணவியர் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியை ஷோபனா ஆகியோரை தலைமை ஆசிரியர் தேவநாதன் பாராட்டினார்.