தென்னை வளர்ப்பு சிறப்பு கருத்தரங்கம்

Added : ஜன 14, 2023 | |
Advertisement
புதுச்சேரி : தென்னையில் நவீன தொழில்நுட்பம் குறித்த சிறப்பு கருத்தரங்கம் மதகடிப்பட்டு அரசு தோட்டக் கலை பண்ணையில் நடந்தது.வேளாண் நலத் துறையின் தோட்டக்கலை பிரிவு, சென்னை தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் 'கேரா சுரக் ஷா' காப்பீடு திட்டம், தென்னையில் நவீன தொழில் நுட்பம் குறித்து நடந்த கருத்தரங்கிற்கு வேளாண் கூடுதல் இயக்குநர் சிவராமன் வரவேற்றார். இயக்குனர் பாலகாந்தி
 தென்னை வளர்ப்பு சிறப்பு கருத்தரங்கம்



புதுச்சேரி : தென்னையில் நவீன தொழில்நுட்பம் குறித்த சிறப்பு கருத்தரங்கம் மதகடிப்பட்டு அரசு தோட்டக் கலை பண்ணையில் நடந்தது.

வேளாண் நலத் துறையின் தோட்டக்கலை பிரிவு, சென்னை தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் 'கேரா சுரக் ஷா' காப்பீடு திட்டம், தென்னையில் நவீன தொழில் நுட்பம் குறித்து நடந்த கருத்தரங்கிற்கு வேளாண் கூடுதல் இயக்குநர் சிவராமன் வரவேற்றார்.

இயக்குனர் பாலகாந்தி நோக்கவுரையாற்றி, கேரா சுரக் ஷா காப்பீடு திட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள தென்னை மரம் ஏறுபவர்களின் விண்ணப்பங்களை தென்னை வளர்ச்சி வாரிய அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார்.

சென்னை மண்டல அலுவலக இயக்குனர் பாலசுதாகரி பேசினார். காமராஜர் அறிவியல் நிலைய பண்ணை மேலாளர் அமலோற்பநாதன்,'தென்னையில் அறிவியல் சாகுபடி தொழில்நுட்ப முறைகள்' என்ற தலைப்பிலும், பூச்சியியல் நிபுணர் விஜயக்குமார் தென்னையை தாக்கும் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினார்.

மனையியல் நிபுணர் பொம்மி, பதப்படுத்தும் முறை மற்றும் மதிப்பு கூட்டல் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

துணை இயக்குனர் சண்முகவேலு நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X