பாலமேடு,-பாலமேட்டில் பா.ஜ., வடக்கு ஒன்றியம் சார்பில்நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நடந்தது.
ஒன்றிய தலைவர் தங்கத்துரை, மாநில கலை கலாசார பிரிவு துணைத் தலைவர் கே.ஜி.பாண்டியன் தலைமை வகித்தனர். மாவட்ட அலுவலக செயலாளர் ஹரி கிருஷ்ணன், துணைத்தலைவர் கோவிந்தமூர்த்தி, மண்டல் பார்வையாளர் சீதாராமன் முன்னிலை வகித்தனர்.
விநாயகர் கோயிலில் 101 பொங்கல் வைத்து கொண்டாடினர். பொறுப்பாளர்கள் சங்கர் கணேஷ், முனீஸ்வரி, சித்ரா உட்பட பலர் பங்கேற்றனர்.
உசிலம்பட்டி
தோப்பு கருப்பசாமி கோயிலில் நடந்த விழாவில் பா.ஜ., மாவட்ட செயலாளர் உதயசந்திரன், நகர் தலைவர் முத்தையா, பார்வையாளர் தீபன் முத்தையா, கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் சவுந்தரபாண்டி, முன்னாள் மாவட்ட செயலாளர் மொக்கராஜ், நிர்வாகிகள் மயில், பிரசாத் கண்ணன்,சேடபட்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.