புதுச்சேரி : சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி போக்குவரத்து போலீஸ் சார்பில் நேற்று பஸ் டிரைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் பிரிவு சார்பில் 11ம் தேதி முதல் வரும் 17 ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை யொட்டி நேற்று, பஸ் டிரைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
போக்குவரத்துஎஸ்.பி., அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய எஸ்.பி., மாறன் பேசுகையில், விபத்தை தவிர்ப்பதில் டிரைவர்களின் பங்கு அதிகம்.
குறிப்பாக பஸ் டிரை வர் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும். ஏர்ஹாரனை பயன்படுத்தக் கூடாது. நகரில் பஸ்சை வேகமாக இயக்கக்கூடாது என்பதை வலியுறுத்தினார்.
கூட்டத்தில், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், கலைச்செல்வன், கீர்த்தி மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் பங்கேற்றனர்.