திருமங்கலம்,-மதுரை தி.மு.க., தெற்கு மாவட்ட ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
திருமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன், தெற்கு சண்முகம், கள்ளிக்குடி ராமமூர்த்தி, தெற்கு மதன்குமார், உசிலம்பட்டி வடக்கு அலெக்ஸ்பாண்டியன், தெற்கு முருகன், மேற்கு பழனி உள்ளிட்டோர் மாவட்ட செயலாளர் மணிமாறனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியன், திருமங்கலம் நகர் செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தலைவர் ரம்யா, துணைத் தலைவர் ஆதவன் உடனிருந்தனர்.