விழுப்புரம், : விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ஏனாதிமங்கலம் அரசு மணல் குவாரி லாரிகள் நிறுத்துமிடத்தில், நடந்த முகாமிற்கு, வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், லாரி டிரைவர்களிடம், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடை பிடிக்க வேண்டும்.
மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், கோவிந்தராஜன் ஆகியோர், சாலை விதிகளைப் பின்பற்றி, விபத்து ஏற்படாத வகையில், வாகனங்களை இயக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, வாகனத்தை அதிவேகத்தில் இயக்காமல் மிக கவனமாக இயக்க வேண்டும் என்பது உள்ளிட்டவற்றை டிரைவர்களிடம் விளக்கி, துண்டு பிரசுரங்களை வழங்கி அறிவுறுத்தினர்.