வில்லியனுார், : திருக்காஞ்சி உழவர் உதவியகம் சார்பில் தானிய பயிர்களை சிறுதானிய பயிர்கள் மூலம் வகைப்படுத்துதல் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
வேளாண் நலத்துறை மூலம் ஆத்மா பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் சர்வதேச சிறுதானிய ஆண்டை போற்றும் வகையில், 'தானிய பயிர்களை சிறுதானிய பயிர்கள் மூலம் பல்வகைப்படுத்துதல்' குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் திருக்காஞ்சியில் நேற்று நடந்தது.
முகாமிற்கு வில்லியனுார் வேளாண் அலுவலர் உமாராணி வரவேற்றார். திருக்காஞ்சி உழவர் உதவியக வேளாண் அலுவலர் தினகரன் முன்னிலை வகித்தார். கூடுதல் இயக்குனர் வசந்தகுமார் முகாமை துவக்கி வைத்தார். பாகூர் கோட்ட இணை இயக்குனர் சிவபெருமான் பயிற்சி நோக்கம் குறித்து விளக்கினார். துணை இயக்குனர் செழியன்பாபு வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் காரைக்கால் பஜன்கோ உளவியல் துறை பேராசிரியர்கள் நாராயணன், சரவணன் ஆகியோர் சிறு தானிய பயிரின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு, சாகுபடி செய்யும் முறைகள் குறித்து பேசினர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை வில்லியனுார் உதவி வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன், ஆத்மா திட்ட மேலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
அரியூர் உழவர் உதவி வேளாண் அலுவலர் சத்தியன் நன்றி கூறினார்.-